Saturday, May 4, 2024

அடுத்த மாதம் பொது போக்குவரத்து தொடங்கப்படுமா?? – முதல்வர் ஆலோசனை!!

Must Read

தமிழகத்தில் கொரோனா ஆய்வுகள் குறித்தும் அடுத்த மாதம் பொது போக்குவரத்தினை தொடங்கலாமா போன்ற முக்கிய ஆலோசனைகளில் ஆட்சியாளர்களுடன் ஈடுபட்டார், முதல்வர் பழனிசாமி.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:

இன்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் 7 கட்ட பொது முடக்கத்தில் பொது போக்குவரத்தினை தொடங்கலாமா என்று ஆட்சியாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதே போல், கொரோனா பணிகளில் ஆட்சியாளர்கள் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகிய ரெய்னா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஆலோசனைக்கு பிறகு முதல்வர் கூறியதாவது, “தமிழகத்தில் தான் கொரோனா நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 45.73 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். குணமடைந்தோர் சதவீதம் 85.45 என்றும் இறந்தவர்கள் சதவீதம் 1.7 என்று உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான குணமடைந்தோர் சதவீதம் உள்ளது.”

கொரோனா தடுப்பு பணிகள்:

மேலும் அவர் கூறியது “கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில கொரோன மையங்களில் 58,840 படுக்கை வசதிகளும், கொரோனா சிறப்பு மையங்களில் 77,223 படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் வசதியுடன் 26,801 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. அரசு சார்பில் கொரோனா பணிகளுக்காக 7,162 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.”

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

“ஆய்வகங்களை பொறுத்த வரை அரசு சார்பில் 63 உள்ளது, தனியார் சார்பில் 83 உள்ளது. கொரோனா பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் பணியாளர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.”

“நான் மீண்டும் சொல்வது, மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு தனது உரையில் தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., 8 வது ஊதியக்குழு அமைவது எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8 வது ஊதியக்குழு எப்போது? அமைக்கப்படும் என...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -