ஹீரோவாக நடிக்கும் பிக் பாஸ் முகன் ராவ் – ஹீரோயின் யாரு தெரியுமா??

0
mugen rao
mugen rao

பிக் பாஸ் மூலம் அறிமுகமான முகின் ராவ் தற்போது படத்தில் நடிக்க உள்ளத்தக்க தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் முகின் 

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 இல் வந்தவர் தான் முகின் ராவ். மலேசியாவை சேர்ந்த இவர் பல ஆல்பம் சாங்கில் நடித்தவர். பிக் பாஸ் வீட்டில் இவருக்கும் நடிகை அபிராமிக்கும் இடையே நட்பு, காதல், தகராறு என பல பிரச்சனைகள் எழுந்தன.

mugen and abirami
mugen and abirami

ஆரம்ப கட்டத்தில் அமைதியாக இருந்த முகின் ராவ் படிப்படியாக தனது திறமைகள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவரின் திறமை, குணங்கள் மக்கள் மனதை ஈர்த்தது. ஆரம்பத்தில் பின்தங்கி இருந்த இவர் படிப்படியாக முன்னேறி முதல் கட்டத்திற்கு வந்தார். எந்த அளவுக்கு பாசத்தை வெளிக்காட்டினாரோ அந்த அளவுக்கு தனது கோவத்தையும் வெளிப்படுத்தினார்.

mugen rao
mugen rao

ஆனால் இந்த சீசனில் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் என அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர். கடைசி 10 நாட்களில் அவர் பாடிய அந்த பாடல் அவரின் தலையெழுத்தையே மாற்றியது. அந்த பாடலின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். இதனால் அவர் டைட்டிலை தட்டி சென்றார்.

mugan rao
mugan rao

தற்போது அவர் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நானி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவான வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் தான் முகின் நடிக்கும் படத்தையும் இயக்கவுள்ளார். இதில் அவருக்கு திவ்ய பாரதி ஜோடியாக நடிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here