Sunday, April 28, 2024

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகிய ரெய்னா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Must Read

அமீரக நாட்டில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க இருந்த சென்னை கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா திடீரென விலகியுள்ளார்.

அமீரகத்தில் போட்டிகள்:

இந்தியாவில் கொரோன பாதிப்பு அதிகமாக இருந்ததால், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதில் இருந்து போட்டிகள் துவங்க உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கிரிக்கெட் வீரர்களான தோனி, ரெய்னா மற்றும் பலர் அமீரகத்திற்கு கிளம்பி சென்றனர். நேற்று அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள இருந்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

chennai team before arriving arab
chennai team before arriving arab

ஆனால், நேற்று சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால், அனைவரும் சுயதனிமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார். யார் யாருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ரெய்னா விலகல்:

தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலாக சென்னை அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா போட்டிகளில் பங்கேற்க இயலாது என்று கூறி போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை சென்னை அணியின் சி.இ.ஓ விஸ்வநாதன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இன்று மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – மக்கள் கவலை!!

suresh raina in csk team
suresh raina in csk team

அவர் அதில் கூறியிருப்பதாவது “ரெய்னா சில தனிப்பட்ட விஷயங்களுக்காக போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது போன்ற சமயங்களில் நாம் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக கருதப்பட்ட ரெய்னா விலகியது, அனைவருக்கும் கவலையை அளித்துள்ளது.

இப்படியாக இருக்க, சிலருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் போட்டிகள் குறிப்பிட்ட தேதிகளில் நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -