Thursday, May 9, 2024

இன்று மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – மக்கள் கவலை!!

Must Read

ஒரு நிலையில் இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

தங்க விலை நிலவரம்:

பாதுகாப்பான முதலீடு என்று கருதி தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் பல ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. நேற்று காலையும் மாலையும் தங்கத்தின் விலை சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனாலும் மக்கள் மத்தியில் ஒரு பயம் இருந்துகொண்டு தான் இருந்தது, ஏனெனில் தங்க விலை எப்போது உயரும் எப்போது குறையும் என்று யாராலும் கணிக்கமுடியவில்லை.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இதனால் மக்கள் மத்தியில் ஒரு தடுமாற்றம் இருந்து வந்தது. அதே போல் இன்றும் குழப்பத்தையும் பயத்தையும் ஒருசேர ஏற்படுத்தும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய விலை:

இன்று காலை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 39,296 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து ரூ. 4,924 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சத்தமில்லாமல் வெள்ளியின் விலையும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயர்ந்து 71.40 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 71,400 ரூபாய் என்று விற்கப்படுகிறது.

இப்படி பல ஏற்ற இறக்கங்களுடன் தங்கம் மற்றும் வெள்ளி விலை இருப்பதால் மக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -