இயல்பு நிலைக்கு திரும்பிய வூஹான் – செப்டம்பர் 1 இல் பள்ளிகள் திறப்பு!!

0
vuhan
vuhan

உலகெங்கிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனவால் நாடுகள் எங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தற்போது செப்டம்பர் 1 இல் சீனாவில் உள்ள வூஹான் நகரில் பள்ளிகள் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வூஹான்

வூஹான் நகரில் முதன்முதலில் தோன்றிய இந்த கொரோனா தொற்று அதனையடுத்து பல நாடுகளுக்கு பரவியது. பல வல்லரசு நாடுகளே இந்த நோயின் தாக்கத்தில் ஸ்தம்பித்து போயினர். இதனால் நாடுகள் எங்கிலும் 144 தடை உத்தரவு போட பட்டது. இந்த நோய்க்கான மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.

corona-wuhan
corona-wuhan

இந்நிலையில் வூஹானில் நோய் தொற்று இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் செப்டம்பர் 1 இல் திறக்கப்பட உள்ளன. அதில் சில விதிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளன. அதாவது மாணவர்கள் முகமூடி அணிந்தே வர வேண்டும். முடிந்த வரை பள்ளி வாகனங்களை தவிர்க்க வேண்டும். மேலும் பள்ளிகளில் தினமும் கடைபிடிக்கப்படும் சுகாதார நடவடிக்கை அறிக்கையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

corona-wuhan
corona-wuhan

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கும் வரை அனுமதியில்லை. பள்ளியில் போதுமான சுகாதார கருவிகளை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு பல விதிமுறையை தொடுத்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here