Wednesday, May 8, 2024

50 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கருத்து – கல்வித்துறை தகவல்!!

Must Read

தமிழகத்தில் தற்போது வரை பள்ளிகள் திறப்பு குறித்து குழப்பமான நிலை தான் நீடித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது 50 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தங்களது கருத்துக்களை கூறியுள்ளதாக கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் பரவல்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பொது முடக்கம் கொரோனா நோய் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டது. இதனால், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களை அனைவரும் ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். கல்வி ஆண்டு துவங்கி முழுமையாக 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி திறப்பு எப்போது இருக்கும் என்ற கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

West Bengal School Directs Boys, Girls to Come on Alternate Days After Eve-Teasing Complaints | India.com

கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி மத்திய அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படலாம் என்று அறிவித்தது. அதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டு இருந்தது. அதே போல் அந்த அறிக்கையினை வெளியிட்ட போது மாநில அரசு தங்களது மாநிலங்களில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தது.

பெற்றோர் கருத்து:

நமது அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்தே பள்ளி திறப்பு குறித்து குழப்பமான சூழல் தான் உள்ளது. கடந்த மாதம் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்படலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு?? அரசு தீவிர ஆலோசனை!!

ஆனால், இதற்கு பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அதனால் நவம்பர் 9 ஆம் தேதி பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் தற்போது வரை 50 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டாம் என்றும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். நாளை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -