தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் OTT தளங்கள் – மத்திய அரசு அதிரடி!!

0

OTT தளங்களில் வெளியாகும் தொடர்களுக்கு ஒழுங்குமுறையை கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது OTT தளங்கள் அனைத்தும் தற்போது தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.

OTT தளங்கள்:

கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களாக தியேட்டர்கள் அடைக்கப்பட்டதால் OTT தளங்களின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் அவற்றில் வெளியாகும் தொடர்கள், படங்கள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தால், ஒழுங்குமுறை இல்லாமல் (சென்சார்) எல்லை மீறிய காட்சிகள் இடம் பெற்றன. இந்நிலையில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Netflix
Netflix

ஆன்லைன் தள செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் உட்பட அனைத்து OTT தளங்களும் தற்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் சென்சார் ஒழுங்குமுறை இப்போது நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும். நாட்டில் தற்போது சுமார் 15 வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் இயங்கி வருகின்றன.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ALT பாலாஜி, ZEE5, அரே, டிஸ்கவரி +, ஈரோஸ் நவ், பிளிக்ஸ்ட்ரீ, ஹோய்சோய், ஹங்காமா, எம்எக்ஸ் பிளேயர், ஷெமரூ, வூட், ஜியோ சினிமா, சோனி லிவ் மற்றும் லயன்ஸ்கேட் நாடகம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் தற்போது குறிப்பிட்ட எல்லைக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதனால் அரசு சென்சார் சான்றிதழ் வழங்கியே பிறகே OTT இல் தொடர்கள் மற்றும் படங்கள் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here