முகம் போல் கால்களும் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா?? சூப்பரான டிப்ஸ் இதோ!!

0

அழகு என்பது நாம் அனைவரும் விரும்பக் கூடிய ஒன்று. முகம் அழகாக இருந்தால் மட்டும் போதாது. கை, கால்களையும் அழகாக பராமரிக்க வேண்டும். இன்றைக்கு, முகத்தை பராமரிக்கவே நேரம் இல்லை. இதில் எப்படி கால்களை பராமரிப்பது என்று பலருக்கு தோன்றும். நம் பாதங்களை அழகாக வைத்துக் கொண்டால் தான் முகம் அழகாக இருக்கும் என்பது பலருக்கு தெரியாத உண்மை.

கால்களை பராமரிப்பது எப்படி??

தினமும் தூங்க செல்வதற்கு முன் கால்களை சுத்தமாக சோப்பு போட்டு தேய்த்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின் சுத்தமாக துணியால் துடைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணையை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களில் நன்றாக தேய்த்தால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

முகம் மறுநாள் காலையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நம் உடலில் உள்ள சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையம். கடுகு எண்ணையில் பூண்டு இரண்டு பல் சேர்த்து சூடுபடுத்தி தேய்த்தால் மூட்டுவலி மற்றும் கால் வலி இருக்காது. வேப்ப எண்ணைய் தேய்த்தால் புண்கள் மற்றும் கிருமிகள் இருக்காது. நல்ல எண்ணெய், மஞ்சள் சேர்த்து தேய்த்தால் நோய்கள் வாராது.

கால்கள் சிவப்பாக மாற:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கால்களை சுத்தமாக கழுவிவிட்டு ஒரு பெரிய டப்பில் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில், ஒரு எலுமிச்சை பழம் சாறு பிழிந்துவிட்டு தோலையும் உள்ளே போட்டு, ஒரு ஷாம்பு, பேக்கிங் சோடா, மற்றும் உப்பு சேர்த்து கால்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின் கடைகளில் கிடைக்கும் ப்ரஷ் ஒன்றை எடுத்து குதிகால் மற்றும் விரல்களை நன்றாக தேய்க்க வேண்டும்.

கால்களில் உள்ள அழுக்குள் அனைத்தும் சுத்தமாக போய்விடும். பிறகு தேவையில்லாத நகங்களை வெட்டவும். பச்சரிசி மாவை எடுத்து கால் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவி வர கால் பார்ப்பதற்கு பளிச்சென்று அழகாக இருக்கும். தொட்டு பார்ப்பதற்கு மென்மையாகவும், வளவளப்பாகவும் இருக்கும்.

நாம் எப்பொழுதும் வெளியே செல்லும் பொழுது முகத்திற்கு மட்டும் கிரீம்களை பயன்படுத்தாமல் கை, கால்களுக்கும் லோஷன்களை பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான், வெளியே செல்லும் பொழுது தூசு மற்றும் அழுக்குகள் தங்காமல் இருக்கும். கால்களுக்கு தகுந்த காலணிகளை அணிய வேண்டும். நம் அழகு மற்றும் தரத்தை அதிகப்படுத்தி காட்டுவதற்கு கால்களுக்கு அதிக பங்கு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here