சுற்றுலா பயணிகளே., கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

0
சுற்றுலா பயணிகளே., கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், பலரும் சுற்றுலா தளங்களுக்கு செல்ல ஆர்வமுடன் உள்ளனர். இவர்களின் பயணங்கள் எளிதாக இருக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மங்களூர் சென்ட்ரல் to கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

அதன்படி வருகிற மே 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை தோறும்) மங்களூரில் இருந்து காலை 09.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06041), அன்று மாலை 05.25 மணிக்கு கோவை சென்றடையும். மறுமார்க்கமாக மேற்குறிப்பிட்ட அதே தேதிகளில், இரவு 10.15 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06042), மறுநாள் காலை 06.55 மணிக்கு மங்களூர் வந்தடையும் என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here