ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன லட்சுமி ராமகிருஷ்ணன் – ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்!!

0

லட்சுமி இராமகிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை வென்றவர். அதன் பின் தமிழ் திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், துணை நடிகையாக அறிமுகமானவர். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

80களில் நடித்து கலக்கிய நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் 18 வயதில் திருமணம் முடித்து தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர். லட்சமி ராமகிருஷ்ணன் முதலில் திரையுலகில் தமிழ் கரு பழனியப்பன் இயக்கிய ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற திரைப்டத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானாவர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

lakshmi ramakrishnan

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பின் தமிழ் திரையுலகில் இவர் “பொய் சொல்ல போறோம்.” “எல்லாம் அவன் செயல்”, “யுத்தம் செய்” போன்ற திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து பிரபலமானார். தமிழில் 2001-2013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் டிவியில் “அவள்” என்ற சீரியலில் நடித்திருந்தார்.

பிறகு ஜு தமிழ் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார். ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பலர் விமர்சித்து திரைப்படங்களில் கேலியும் கிண்டலும் செய்தனர். மேலும் இதனை கலாய்த்து பலர் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டனர்.

பின் இயக்குனராக களமிறங்கி 4 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவர் எப்போதும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். அதேபோல இப்போது அவர் தனது பழைய புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தலை முடியை கட் செய்து மிகவும் ஸ்லிம்மாக தோற்றம் அளிக்கிறார். அதனை கண்டு லட்சுமி இராமகிருஷ்ணணா இது?? என்று ரசிகர்கள் வியந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here