தமிழக கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு – முக்கிய அறிவிப்பு !!!

0

தமிழகத்தின் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

ஆலோசனை

தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிப்படைய கூடாது என்று தமிழக அரசு ஆன்லைன் வகுப்பை நடத்தி வருகிறது. மாணவர்களும் ஆன்லைன் வகுப்பை தொடர்ந்து வந்த நிலையில் தமிழக அரசு திடீரென வரும் நவ. 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரியை திறக்க முடிவு எடுத்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

student
student

ஆனால் பல எதிர்ப்புகள் வந்த நிலையில் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்புகள் தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை நடத்திய பின் பள்ளி மற்றும் கல்லூரி திறப்பின் தேதியை அறிவிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பள்ளி மற்றும் கல்லூரித் திறப்பு குறித்த தேதியை நாளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செமஸ்டர் தேதி

கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை படித்து வருகின்றன. கொரோனா காரணமாக கல்லூரி மற்றும் பள்ளிகள் தாமதாக வகுப்புகளை தொடங்கியதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. பின்னர் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் மற்றும் மாதத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. போன ஆண்டு மாணவர்கள் திறந்த புத்தகத்தை பயன்படுத்தி செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். ஆனால் இந்த ஆண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செமஸ்டர் தேர்வு நடத்த முடிவு செய்து உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

semester
semester

இந்த ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. தேர்தல் மையமாக ஆக்குவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி தேவைப்படுவதால் அங்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டி உள்ளது. ஆகையால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்தலுக்கு முன்பே தேர்வுகளை நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த போவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பை வெளிட்டுள்ளது. சில அதிகாரிகள் கல்வியாண்டு கால அட்டவணையில் திருத்தங்கள் செய்யப்படுவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here