Wednesday, May 15, 2024

அக். 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது – தமிழக அரசு திட்டவட்டம்!!

Must Read

தமிழகத்தில் பொது முடக்கம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் இந்திய அரசால் பொது முடக்கம் அமலபடுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனால் சென்னையில் உள்ள மெரினா கடற்கரைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மெரினா கடற்கரையை திறக்குமாறு மாநில அரசுகளுக்கு அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கினை உயர்நீதிமன்ற நீதிபதிகளான வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது பொது மக்களை மெரினா கடற்கரைக்கு அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் தங்களது முடிவினை இன்று (அக்டோபர் 05) தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

முடிவில் திட்டவட்டம்:

அதேபோல் புதிய கடைகள் வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் விவரங்களையும், பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. இன்று தமிழக அரசு அறிக்கையினை தாக்கல் செய்திருந்தது.

கொரோனா பாதித்த நடிகை தமன்னாவிற்கு தீவிர சிகிச்சை?? ரசிகர்கள் ஷாக்!!

அதில் தெரிவித்ததாவது “தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொது மக்களுக்கு மெரினா கடற்கரை செல்ல அனுமதி கிடையாது. மெரினாவில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் திறப்பு வரும் நவம்பர் 09 ஆம் தேதி நடக்கவுள்ளது.” இவ்வாறாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -