ஐபிஎல் 2020: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் – முதலிடம் யாருக்கு??

0

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் துபாய் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்த உள்ளன. இவ்விரு அணிகளும் முந்தைய போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குவதாலும், இப்போட்டியில் வெற்றி பெரும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ்:

இரு அணி கேப்டன்களும் சிறந்த பார்மில் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடிய நான்கு போட்டிகளிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓப்பனிங்கை அசுர பலத்துடன் வழிநடத்தி வருகிறார். விராட் கோஹ்லி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் பழைய பார்முக்கு திரும்பி உள்ளது பெங்களூரு அணிக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பெங்களூரு அணியில் தேவதூத் பாடிக்கல், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் டெல்லி அணியின் பிருத்வி ஷா, ஷிகர் தவான், ரிஷாப் பந்த் ஆகிய அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளதால் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது.

பந்துவீச்சை பொறுத்தவரை, பெங்களூரு அணியில் யுஸ்வேந்திர சாஹல், இசுரு உதனா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். டெல்லியில், ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளது பலம். காயத்தில் இருந்து மீண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போட்டியில் கலந்து கொண்டால் பெங்களூரு பேட்ஸ்மேன்களுக்கு சற்று சிக்கல் தான்.

உத்தேச 11 அணி:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – தேவதூத் பாடிக்கல், ஆரோன் பிஞ்ச், விராட் கோஹ்லி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (வ), சிவம் துபே, குர்கீரத் சிங் மான், வாஷிங்டன் சுந்தர், இசுரு உதனா, நவ்தீப் சைனி, ஆடம் ஜாம்பா, யுஸ்வேந்திர சாஹல்

டெல்லி கேபிடல்ஸ் – பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பந்த், சிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோயினிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அமித் மிஸ்ரா.

ஆடுகளம் எப்படி இருக்கும்??

துபாயில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தன. முதலில் பேட்டிங் செய்யும் அணி இம்மைதானத்தில் நடந்த ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதே சரியான சாய்ஸ் ஆக இருக்கும்.

நேருக்கு நேர்:

இவ்விரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பெங்களூரு 14 போட்டிகளிலும், டெல்லி அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை. இந்த சீசனில் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் டாப் 3 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here