முல்லையின் மீது போடப்பட்ட பழியில் இருந்து மீட்கும் கதிர் – மாட்டிக்கொள்வாரா கண்ணன்!!

0

முல்லையை காப்பாற்ற குமரேசனிடமிருந்து வாங்கி வந்த பணத்தை பீரோவில் வைக்கிறார் கதிர். காணாமல் போன பணம் கிடைத்த சந்தோஷத்தில் முழு குடும்பமும் இருக்க, மீனா மட்டும் சந்தேகப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் இரவு வீட்டிற்கு வரும் மூர்த்தி பணம் கிடைத்ததா என கேட்க, நல்லா தேடிப்பாத்துட்டேன், கிடைக்கவேயில்லை என கூறுகிறார் தனம். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கதிர் அங்கு வருகிறார். அப்போது பணம் எடுத்ததை நாமே ஒத்துக்கொள்வோம் நம்மால் தான் இவ்வளவு பிரச்சனை என நினைத்து விட்டு உண்மையை சொல்ல போகிறார் கண்ணன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது போன் அடிக்க அங்கிருந்து கிளம்புகிறார் கண்ணன். தனத்திடம் வீட்டு செலவுக்கு பணம் தருகிறார் மூர்த்தி. அதை கொண்டு போய் நீயே பத்திரமாக வை என லட்சுமி கூறுகிறார். அப்போது காணாமல் போன பணத்துக்கு என்ன பதில் என மீனா கேட்கிறார்.

பணத்தை பீரோவில் வைக்க செல்லும் தனம் கதிர் வைத்த பணம் பீரோவில் இருப்பதை பார்க்கிறார். பணம் கிடைத்த சந்தோஷத்தில் ஓடி வரும் தனம், பணம் கிடைத்துவிட்டது என கூறுகிறார். பணம் கிடைத்த சந்தோஷத்தில் மூர்த்தி குடும்பம் உள்ளது. அப்போது காணாமல் போன பணம் எப்படி வந்தது என குழம்புகிறார் கண்ணன்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இணையும் ஷிவாங்கி, பாலா – வைரலாகும் புகைப்படம்!!

பின்பு ரூமில் கதிரிடம், அலமாரியை களைச்சு போட்டு தேடுனப்போ கிடைக்காத பணம், இப்போ எப்படி கெடச்சது, ஒருவேளை நான் அழுததை பார்த்து யாராவது பணத்தை கொண்டு வந்து வச்சிருப்பாங்களோ, நீங்க தான் வச்சீங்களோ என சந்தேகமாக கேட்கிறார் முல்லை.

கதிரின் பதிலால் நிம்மதியடைந்த முல்லை கதிரின் மடியில் படுத்துக்கொண்டு தூங்குகிறார். பிறகு பணம் கிடைத்த குழப்பத்தில் மீனா யோசித்து கொண்டிருக்கிறார். 2000 ரூபாயாக காணாமல் போன பணம் எப்படி 500 ரூபாயாக வந்தது என்ற மீனாவின் சந்தேகத்தை கேட்டு கண்ணனும், கதிரும் குழம்புகிறார்கள்.

கதிர் சமாளிப்பதை அறிந்த கண்ணன், அண்ணன் தான் பணத்தை வச்சிருப்பாரோ என சந்தேகப்படுகிறார். சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் என சொல்லி ஏற்கனவே குழம்பியிருக்கும் மீனாவை கூட குழப்பி விடுகிறார் கதிர். அடுத்த நாள் விடிந்ததும் ஜீவா, ஜனார்த்தனன் கடைக்கு போவது பிடிக்கவில்லை என லட்சுமி கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here