தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

காற்று வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டின் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் காற்று மறுபாட்டின் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 27 முதல் 29 வரையுள்ள தேதிகளில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘வக்கற்ற பாஜகவின் பினாமி தான் அதிமுக’ – ஸ்டாலின் ஆவேசம்!!

அடுத்து வரவுள்ள இரண்டு நாட்களுக்கு தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழையளவு பதிவு செய்யப்படவில்லை. மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here