ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்களுக்கு கொடுத்த கொரோனா அட்வைஸ் – வைரலாகும் பதிவு!!

0
rahul

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொரோனாவிலிருந்து குணமடைய உடற்பயிற்சி முக்கியம் என மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தென் இந்திய சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர் அருண் விஜய்யின் ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இவர். தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியான ‘என்னமோ எதோ’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் பேவரைட் திரைப்படங்களாக இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழில் முன்னாடி இந்த வேலை தான் பார்த்தாரா?? வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் சிவகார்த்திக்கேயனுடன் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஹிந்தி திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங் அந்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளார். மும்பையில் வசித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் சொந்தமாக உடற்பயிற்சி மையம் ஒன்றை துவங்கியுள்ளார்.

உடற்பயிற்சி செய்வதின் அவசியத்தை கூறி வந்த ரகுல் ப்ரீத் சிங் மக்களுக்கு சிறந்த ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார். அது என்னவென்றால் கொரோனாவிலிருந்து குணமடைய சத்தான உணவும், உடற்பயிற்சியும் முக்கியம் என மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here