‘என்ன கீர்த்தி இப்படி போக போக தேஞ்சுகிட்டே போறீங்க’ – இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!!

0

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமாக சேலை அணிந்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த ரீல்ஸ் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் எந்த தான் ஒரு நடிகரின் மகளாக இருந்தாலும் இவர் தனது கடினமாக உழைப்பின் காரணமாக தான் திரைத்துறையில் ஜெயித்துள்ளார்.

வாக்காளர்களுக்காக பணம் பதுக்கிவைப்பு?? திமுக வேட்பாளர் வீட்டில் குவிந்த ஐடி அதிகாரிகள்!!

தமிழில் முதன் முதலாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரஜினி முருகன்” என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து இவர் தொடர்ச்சியாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்து விட்டார்.

இவரது சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுவது “மகாநதி” திரைப்படம் தான். ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் இவர் ஒப்பந்தமான போது அனைவரும் கேலி செய்தனர். ஆனால், கீர்த்தி தனது அபாரமான நடிப்பின் காரணமாக பெரும் புகழ் அடைந்தார்.

இப்படியான சூழலில் தற்போது கீர்த்தி தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த திரைப்படங்களும் மெகா ஹிட் அடித்து வருகின்றது. கீர்த்திக்கு எப்படி நடிப்பின் மீது ஆர்வம் அதிகமோ அதே போல் தான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வது மிகவும் பிடிக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமீபத்தில் தனது தம்பியுடன் கூட இவர் “டோன்ட் ரஷ்” என்ற ட்ரெண்டிங்கில் உள்ள பாடலிற்கு ரீல்ஸ் செய்தார்.

தற்போது அதே போல் வித விதமாக உடைகளில் மாற்றுவது போல ஒரு ரீல்ஸினை செய்துள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here