பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழில் முன்னாடி இந்த வேலை தான் பார்த்தாரா?? வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் எழில் என்ற கேரக்டரில் நடித்து மக்களின் நாயகனாக மாறியிருப்பவர் நடிகர் விஷால். தற்போது எழில் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜே விஷால்

தமிழ் மக்களின் ரீசன்ட் பேவரைட் லிஸ்டில் இணைந்துள்ளது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர். பொதுவாக குடும்பப்பாங்கான கதை என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்தமானது தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இன்று வரை மக்களின் பேவரைட்டாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு குடும்பத்தின் பாரத்தை தாங்கும் அம்மா, அதை கவனிக்காத கணவன், பிள்ளைகள், நானும் உயிருடன் இருக்கும் ஒரு ஆள் தான் என நிலைநிறுத்த போராடும் அம்மாவின் பாச போராட்டம் தான் பாக்கியலட்சுமி சீரியலின் கதை. எட்டு பேர் கொண்ட பாக்கியலட்சுமி குடும்பத்தில் அம்மா பாக்கியலட்சுமியின் செல்ல மகனாக நடித்து வருபவர் தான் இந்த விஷால்.

என்ஜீனியரிங் படித்துள்ள விஷால் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர். வெளிச்சம் டிவி, வேந்தர் டிவி என சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் விஷால். சில ஆண்டுகளுக்கு முன்னாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘கல்யாணமாம் கல்யாணம்’ தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார் விஷால்.

இந்தியாவில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

தொடர்ந்து ‘அரண்மனைக்கிளி’ என்ற சீரியலிலும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் விஷால். முன்னதாக விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாற வேண்டும் என்ற விருப்பம் இவருக்கு இருந்து வந்தது. ஆனால் காலம் இவரை சினிமாவுக்கு அழைத்து சென்றது. நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்துள்ளார் விஷால்.

உடல்நல குறைபாட்டால் அந்த படத்திலிருந்து விலகிய விஷாலுக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது பாக்கியலட்சுமி சீரியல் வாய்ப்பு. இந்த சீரியலில் விஷால் நடித்து வரும் எழில் கதாப்பாத்திரம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்த தொடரின் மூலம் ஒரு தொகுப்பாளராக மட்டுமல்ல ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ளார் விஷால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here