பாரதி கண்ணம்மா சீரியலில் இணையும் ஷிவாங்கி, பாலா – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி மகா சங்கமத்தில் குடும்பங்களுக்கு இடையேயான போட்டி நடக்கிறது. அந்த போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

குக் வித் கோமாளி

விஜய் டிவி சீரியல்களின் மெகா சங்கமம் சிறப்பு தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சிறப்பு தொடரில் சில சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சீரியலை சிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் இரண்டாவது வாரமாக மெகா சங்கமம் சிறப்பு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா, ராஜா ராணி தொடர்களின் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மெகா சங்கமம் எபிசோடின் ஆரம்பத்தில் பிக்பாஸ் பிரபலமும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அர்ச்சனா கலந்து கொண்டு போட்டியை நடத்தினார். பின்பு நடந்த என்டர்டைன்மெண்ட் சுற்றில் பிக்பாஸ் பிரபலங்கள் சோம், ரியோ, சம்யுக்தா கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை ஜட்ஜ் செய்தார்கள்.

மேலும் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – அவதியில் மக்கள்!!

இந்த எபிசோடுகள் இந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள போட்டிகளில் நாளை சமையல் போட்டி நடைபெற உள்ளது. அந்த சமையல் போட்டியில் சீரியலின் போட்டியாளர்கள், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகளுடன் சமைக்க வேண்டுமாம்.

அதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து ஷிவாங்கி, பாலா, சரத் உள்ளிட்ட சில பிரபலங்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியலில் கலந்து கொள்ள உள்ளனர். குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்து கொண்ட படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here