Thursday, May 2, 2024

3 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு- மாநில அரசு அதிரடி!!

Must Read

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் மூன்று மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் அங்கு பொது முடக்க 144 தடை உத்தரவு 1 மாத காலத்திற்கு போடப்பட்டுள்ளது. மக்கள் சில நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல்:

கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக எர்ணாகுளம், தலைநகரான திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கொரோன பரவல் அச்சம் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

pinarayi-vijayan
pinarayi-vijayan

இது தவிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9000-திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு நாளைக்கு 70 நபர்களுக்கு மேல் உயிரிழக்கின்றனர். மேலும், தற்போது 77 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சில நெறிமுறைகள்:

இதனை அடுத்து இந்த மூன்று மாவட்டங்களிலும் கொரோனா கால பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 1 மாத காலத்திற்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது,

  • 5 பேருக்கு மேல் பொது இடத்தில கூடக் கூடாது. ஆனால், பேருந்துகள், பொது போக்குவரத்து செயல்படும். மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்கும்.
  • திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்து கொள்ளலாம். இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் கலந்து கொள்ளலாம். மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்கலாம்.
  • உணவகம், கடைகள் போன்றவற்றில் 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது போன்ற நடவடிக்கைளை பின்பற்றாமல் இருந்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -