சங்கடங்களை தீர்க்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் – வழிபடும் முறை!!

0

புரட்டாசி விரதம் இருப்பது ஆன்மீக ரீதியாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அவரை புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபட்டு முழு அருளையும் பெறலாம். மேலும் சனியின் பிடியில் இருந்தும் தப்பிக்கலாம்.

புரட்டாசி விரதம்

புரட்டாசி மாதத்தில் தான் மழை காலம் ஆரம்பித்திருக்கும். இது நாள் வரை இருந்த வெப்பநிலையால் பூமி சூடேறி இருக்கும். இந்த மழை காலத்தால் பூமியில் தங்கி இருந்த வெப்பம் வெளியேற தொடங்கும். இதனால் அனைவரின் உடலும் உஷ்ண நிலையில் இருக்கும். இந்த வேளைகளில் அசைவ உணவு எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும்.

வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – ரசிகர்கள் ஷாக்!!

puratasi viratham

இதனால் தான் புரட்டாசியில் விரதத்தை முன்னோர்கள் கடைபிடித்து வந்துள்ளனர். மேலும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி தீர்த்தம் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

வழிபாடும் முறை

புரட்டாசி சனிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு, குளித்து வீட்டை சுத்தப்படுத்தி பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். பெருமாள், ஆண்டாள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

puratasi fasting
puratasi fasting

பிறகு காலையில் விரதம் இருந்து படையல் சமைத்து கடவுளுக்கு வடைமாலை சாற்ற வேண்டும். பின்பு சாமிக்கு படைத்து அரோகரா சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் அகலும். மேலும் இல்லாதவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பெருமாளின் முழு அருளையும் பெறலாம்.

saturn
saturn

சனி அதிகம் பெற்றவர்கள், ஏழரை சனி, அஷ்டமத்து சனி உள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வந்தால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here