Sunday, May 19, 2024

பாலிவுட் படம் “லட்சுமி பாம்” – வருகிறது ஆன்லைனில்..!!

Must Read

பாலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்த ராகவா லாரன்ஸ் இயக்கிய “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி இல் ரிலீஸ் ஆக உள்ளது.

“லட்சுமி பாம்”: 

தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய படம் “காஞ்சனா” . 2011 வெளியான இந்த படம் ராகவா லாரன்ஸ்ற்கு பெரும் திருப்பு முனையாக இருந்தது.

"laxmi Bomb"
“laxmi Bomb”

இந்த படத்தில் ராய் லட்சுமி, கோவை சரளா மற்றும் ஸ்ரீராம் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தநிலையில் இந்த படத்தை ஹிந்தியிலும் எடுக்க முடிவெடுத்தனர்.

Laxmmi Bomb'
Laxmmi Bomb’

அந்த வகையில் ராகவா இயக்கி, அக்ஷய் குமார் நடிப்பில் இந்த படம் பாலிவுட்டில் ரிலீஸ் ஆக இருந்தது. நடிகை கியாரா அத்வானி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். இந்த படம் மே 22 ஆம் தேதி வெளியாக இருந்தது. அக்ஷய் மற்றும் ராகவா முதல் முறையாக இணைந்து உள்ள படம் “லட்சுமி பாம்”

Raghava Lawrence - Akshay Kumar
Raghava Lawrence – Akshay Kumar

கொரோனவால் தாமதம்:

இந்த நிலையில், கொரோனா நோய் பரவலால் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் நடக்க கூடாது என்று அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது. அதே போல் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் தயாரிப்பாளர்கள் பெருத்த அவதிக்கு உள்ளாகினர்.

நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிப்பு?? இன்று மாலை பிரதமர் மோடி உரை!!

அதனால், புது முயற்சியாக படங்களை ஓ.டி.டி என்று சொல்லப்படும் ஆன்லைன் மூலம் ரிலீஸ் செய்கின்றனர் தயாரிப்பாளர்கள். அது நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தையும் ஓ.டி.டி இல் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்த டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளது. படம் வெளியாக உள்ள தேதிகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் நேரடியாக ஓ.டி.டி இல் ரிலீஸ் ஆவது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -