Monday, April 29, 2024

புனித பூமியான இந்தியாவில் தொடர் பாலியல் வன்கொடுமை – வேதனை தெரிவித்த நீதிபதிகள்!!

Must Read

புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில் 15 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாவது வருத்தத்தை அளிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும் வேதனை அடைந்துள்ளனர்.

மனுவினை விசாரித்த நீதிபதிகள்:

கொரோனா பொது முடக்கம் காரணமாக 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சூர்யபிரகாசம் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்தார். கடைசி விசாரணையின் போது நீதிபதிகள் புலம்பெயர் தொழிலார்களின் நலன் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை முழுவதுமாக நீங்க – இதோ எளிய முறையில் பாட்டி வைத்தியம்!!

இந்த வழக்கினை உயர்நீதிமன்ற நீதிபதிகளான கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகின்றது. இந்த வழக்கு இன்று விசாரிக்கபட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மனுவினை தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கினை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்கும் போது வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் குறுக்கிட்டு ஒரு வாதத்தினை முன் வைத்தார். அவர் கூறியதாவது “தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார். இதனை கேட்டு நீதிபதிகள் மிகுந்த வருத்தம் தெரிவித்தனர்.

நீதிபதிகள் வேதனை:

இந்தியாவில் நடக்கும் தொடர் வன்கொடுமை சம்பவங்களை நினைத்து வேதனையும் அடைந்தனர். நீதிபதிகள் கூறியதாவது “இந்தியாவில் பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு உரிய நேர கட்டுப்பாடும், ஊதியமும் வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்.”

high court
high court

“புனித பூமியாக உள்ள இந்திய மண்ணில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வருத்தம் அளிக்கிறது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அசாம் மாநில பெண் பாலியல் வன்கொடுமை வழக்கினை காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -