ராயல் என்பீல்ட்க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டா CB 350 – கவலையில் RE கிளாசிக் ரசிகர்கள்!!

0

பைக் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் புதிய பைக் HB 350 இன்று இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 1960 களின் ஹோண்டா CB மாடல்களை ஒத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. பைக்கின் ஹெட்லைட், ரவுண்ட் கண்ணாடிகள், குரோம் ஃபெண்டர்கள் & வசதியான சீட் அமைப்பு என புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

CB 350 & Classic 350
CB 350 & Classic 350

ரெட்ரோ ஸ்டைலிங் மற்றும் கவர்ச்சிகரமான வண்ண விருப்பங்களுடன் இளைஞர்களை கவரும் வகையில் CB 350 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நீண்ட தூர பயணம் (Long rides) செல்பவர்களுக்கு சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும் என ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது. தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 மற்றும் ஜாவா போன்றவற்றிற்கு இது கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அக்டோபர் 17ம் தேதி முதல் CB 350 டெலிவரி தொடங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ground Clearance:

CB 350 – 166 மிமீ
கிளாசிக் 350 – 135 மிமீ

CB 350 & Classic 350
CB 350 & Classic 350 (Front Look)

எடை:

CB 350 – 181 கிலோ
கிளாசிக் 350 – 195 கிலோ

என்ஜின்:

CB 350 – 348 சிசி (21 bhp பவர், 3000 rpm இல் 30 nm டார்க், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்)
கிளாசிக் 350 – 349 சிசி (19.1 bhp பவர், 3000 rpm இல் 28 nm டார்க், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்)

CB 350 Silencer vs Classic 350 Silencer
CB 350 Silencer vs Classic 350 Silencer

இவை மட்டுமின்றி CB 350 முழு எல்இடி ஹெட்லைட், டெயில் லாம்ப் மற்றும் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுடன் வருகிறது. ஸ்லிப்பர் கிளட்ச், எஞ்சின் ஸ்டார்ட் / ஸ்டாப் சுவிட்ச் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு போன்ற அசத்தல் வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. குரோம் பூசப்பட்ட சைலன்சர் இதற்கு கூடுதல் பிளஸ் ஆக இருக்கும். ராயல் என்பீல்ட் நிறுவனம் தொழில்நுட்ப விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்தாத நிலையில், ஹோண்டா இந்த வசதிகளை சேர்த்துள்ளது பைக் பிரியர்களை கவர்ந்துள்ளது.

விலை:

கிளாசிக் 350 – ரூ. 1.69 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)
CB 350 – ரூ. 1.9 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)

CB 350 Instrumental Cluster
CB 350 Instrument Cluster

ராயல் என்ஃபீல்ட் 350 சிசி பிரிவில் அதிகம் விற்பனையாகும் பைக் பிராண்ட் ஆகும். ஒவ்வொரு மாதமும் 45 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது (கிளாசிக் 350, புல்லட் 350, எலக்ட்ரா 350). விற்பனை சரிவு காரணமாக ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் இந்தியாவில் இருந்து வெளியேறி விட்டதால் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என பைக் பிரியர்கள் கூறுகின்றனர். இதற்கு ஹோண்டா CB 350 முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here