திருமணம் என்றாலே ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்ப்பது முக்கியமாகும். பொதுவாக ஒரே ராசி மற்றும் நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாமா?? கூடாதா?? என்று கேள்வி அனைவர்க்கும் உள்ளது. இப்பொழுது அதை பற்றி பாப்போம்.
ஜாதகம்
ஒருவருக்கு கல்யாண யோகம் என்பது அவரது ஜாதகத்தில் 7 ஆம் இடத்தை பொறுத்தே அமைகிறது. மேலும் அவர்களின் கிரக நிலைகளின் அடிப்படையிலேயே அவர்களின் திருமணம் வாழ்க்கையும் அமைகிறது.
திருமண பொருத்தம் பார்க்கும்போது தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தை பேறு, ஆயுள், செல்வ நிலை அனைத்தையும் கணக்கிடுகிறோம். இப்பொழுது இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக அமையும் போது அவர்களுக்கு நட்சத்திர பொருத்தத்தில் 10 பொருத்தம் இருந்தாலும் அவர்களுக்கு மாங்கல்ய பொருத்தம் இருக்காது.
ஒரே ராசியில் திருமணம் செய்யும் போது அவர்களுக்கு ஏழரை சனி காலத்தில் மிகவும் கஷ்ட பட வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் இருவருக்கும் ஒரே ராசி என்பதால் ஏழரை சனி மற்றும் கிரகசாரங்கள் போன்றவை ஒன்றாகவே அமையும். மேலும் பிறக்கும் குழந்தையும் ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் வீடே கஷ்டத்தில் தாண்டவம் ஆடும் நிலை ஏற்படும்.
ஒரே ராசி நட்சத்திரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரசனை, விருப்பம் அனைத்தும் ஒன்றாக இருக்கும். இதனால் குடும்ப வாழ்கை அலுத்து போக கூட வாய்ப்புள்ளது. மேலும் பரணி, ஸ்வாதி, மூலம், ஆயில்யம், சதயம், அவிட்டம், பூரட்டாதி போன்ற நத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.