Wednesday, May 1, 2024

உ.பி., பாலியல் பலாத்காரத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தை பார்க்க நடைபயணம் – ராகுல் காந்தி அதிரடி கைது!!

Must Read

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டு மக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அப்பெண்ணின் குடும்பத்தை சந்திக்க நடைபயணம் மேற்கொண்டார், அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் கூட்டு பலாத்காரம்:

உத்தர பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் 4 வாலிபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் தாக்கபட்டார். தற்போது அந்த பெண் மரணம் அடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இப்படியாக இருக்க இந்த கொல்லப்பட்ட பெண்ணின் சொந்த கிராமமான ஹத்ராஸ் பகுதிக்கு செல்ல காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் முடிவு எடுத்தனர்.

புனித பூமியான இந்தியாவில் தொடர் பாலியல் வன்கொடுமை – வேதனை தெரிவித்த நீதிபதிகள்!!

rahul gandhi arrested
rahul gandhi arrested

தொடர் பரபரப்பு:

அவர்கள் இருவரும் தலைநகர் டெல்லியில் இருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக செல்ல திட்டமிட்டனர். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இவர்களுடன் பயணிக்க தயாராக இருந்தனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வருவதை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

அதனால் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சற்று நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது. இதற்கிடையில் போலீசார் தடி அடி நடத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் தடுத்து நிறுத்த முடியாத காரணத்தால் போலீசார் ராகுல் காந்தியை கைது செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தடி அடியின் போது ராகுல் காந்தி போலீசாரால் தாக்கப்பட்டார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -