Saturday, May 11, 2024

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!!

Must Read

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல விதமாக உணவுகளை தாய்மார்கள் தான் செய்து தர வேண்டும். ஆனால், எது நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த உணவாக இருக்கும் என்று பெரும்பாலான அம்மக்களுக்கு தெரியவில்லை. அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சத்தான உணவுகள்:

குழந்தைகளை சிறு வயதில் இருந்தே பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட பழக்கப்படுத்தவேண்டும். ஏனென்றால், பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்துள்ளன. அது அவர்களுக்கு வலு அளிப்பதாக உள்ளது.

அதே போல் தினமும் 3 விதமான காய்கறிகளை சாப்பிட அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, பெர்ரி மற்றும் பூசணி, வெங்காயம், அடர் பச்சை இலை காய்கறிகள் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து கொடுக்க வேண்டும்.

சத்து நிறைந்த உலர் உணவு வகைகள்:

குழந்தைகள் அப்படி காய்கறிகள் மற்றும் பழவகைகளை சாப்பிட மறுத்தால் அவர்களுக்கு உலர் உணவு பொருட்களை தரலாம். பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதோடு அவர்களை புத்தி கூர்மை உள்ளவர்களாகவும் மாற்றும். அவர்கள் இதனை சாப்பிட மறுத்தால் “மில்க்ஷேக்” போல செய்து கொடுக்கலாம். இதன் மூலமாக பிடித்ததை செய்து கொடுத்தது போலாகவும் இருக்கும் சத்தும் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும் “அவகேடோ மில்க்ஷேக்”!!

அதே போல் சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவாக நாம் கருதும் இஞ்சி, மஞ்சள், மிளகு போன்ற பொருட்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த பெரிதும் உதவுகிறது. அவர்கள் அருந்தும் பாலில் மஞ்சள் சேர்த்து கொடுத்தால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே வளரும். கொரோனா போன்ற வைரஸ் பரவும் காலத்தில் இது போன்ற உணவுகள் குழந்தைகளில் நலனை பெரிதும் பாதுகாக்க உதவும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விருதுநகரில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்து., இம்முறை 3 அறைகள் தரைமட்டம்? மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!

அண்மைக்காலமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு வருவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி நாராயணபுரம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -