விருதுநகரில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்து., இம்முறை 3 அறைகள் தரைமட்டம்? மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!

0

அண்மைக்காலமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு வருவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி நாராயணபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில், வெடி விபத்து ஏற்பட்டதில் 3 அறைகள் தரைமட்டமாகி உள்ளன. இந்த விபத்து காலை நேரத்தில் நடைபெற்றதால், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் மட்டும் 5 வது முறையாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதால், பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தி நேரத்தை குறைக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுறுத்தி உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here