பொறியியல் தரவரிசைப் பட்டியல் 25ம் தேதி வெளியீடு – அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்து உள்ளார். சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து இருந்த காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தரவரிசைப் பட்டியல்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முழுக்க ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில், மாணவர்களை நேரில் அழைக்காமல் சேவை மையங்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்கின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

KP Anbalagan
KP Anbalagan

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கும் பணிகளும் முடிவடைந்து விட்டன. இதனால் இன்று (செப்.17) இன்ஜினியரிங் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சான்றிதழ்களை பதிவேற்ற மேலும் கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தால் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

எனவே வரும் 25ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்து உள்ளார். மாணவர்கள் தங்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்பதை www.tneaonline.org இணையதள பக்கத்தில் உள்நுழைந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்கள் இருந்தால் 044-22351014 மற்றும் 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளாலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here