10 கோடியை தாண்டிய அபராத வசூல் – தமிழக காவல்துறை அதிரடி..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வந்தவர்களிடம் இருந்து இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் அபராத தொகை வசூல் செய்யப்பட்டு உள்ளது.

ஊரடங்கு மீறல்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் மறுபுறம் விதிகளை மீறி பலர் தேவையற்ற காரணங்களுக்காக வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர் தமிழக காவல்துறையினர். அந்த வகையில் இதுவரை ரூ. 10.21 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

விஜயின் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது – முதல்வரிடம் கோரிக்கை..!

அதுமட்டுமின்றி இதுவரை ஊரடங்கை மீறியதற்காக 5,82,877 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 4,48,456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக 5,55,566 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை குறிப்பிட்ட தேதியில் காவல் நிலையத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறை அறிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here