விஜயின் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது – முதல்வரிடம் கோரிக்கை..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை தள்ளி வைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

தியேட்டர் ரிலீஸ்:

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் வாட்டிவதைத்து வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுமே இதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழியாக உள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் தியேட்டர்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு உள்ளது. ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் போதும் தியேட்டர்கள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். பல திரைப்படங்களும் வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி இல் ரிலீஸ் செய்யப்பட்டன. ஆனால் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஆன்லைனில் ரிலீஸ் செய்ய படக்குழு சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே கொரோனா பாதிப்பு முடிந்து, தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை தள்ளிவைக்குமாறு முதல்வரிடம் கேயார் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பாதிப்பு காலத்தில் படம் ரிலீஸ் செய்யப்பட்டால் விஜய்க்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் கெட்டப் பெயர் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொருளாதார சிக்கல்களை காட்டிலும் மக்களின் உயிர்மீது அக்கறை கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here