தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக!!

0

இன்று நடந்த ஆலசோனை கூட்டத்தில் சுமுகமான முடிவு ஏற்படாத நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகபோவதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்களுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்நிலையில் தற்போது வரை அதிமுக கட்சியின் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த முடிவுகளை எடுக்கவில்லை. தேமுதிக மற்றும் அதிமுக கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கூட்டம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக மற்றும் தேமுதிக இடையே சுமுகமான முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலக உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட ஸ்டாலின் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

இதில் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதிகளையும், தொகுதி எண்ணிக்கையையும் அதிமுக தரவில்லை, எனவே மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை கருத்துக்களின் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து பேசிய துணை செயலாளர் பார்த்த சாரதி கூறுகையில், தனித்து போட்டியிடுவது குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here