Saturday, April 27, 2024

தனியார் பேருந்துகள் நாளை இயங்காது – பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், பேருந்துகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கொரோனா தளர்வுகள்:

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதில் அரசு பேருந்துகளும் இயக்கப்படாமல் இருந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படலாம் என்று நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.

இதனால் பேருந்துகளை சீரமைக்கும் பணிகள் வேகமாகவும் தீவிரமாகவும் நடந்து வருகிறது. பேருந்துகள் மாவட்டத்திற்குள் மட்டும் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பேருந்துகளை இயக்குபவர்கள் கடும் அதிருப்தி அடைத்துள்ளனர்.

தனியார் பேருந்துகள் “நோ”:

இதனால் தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டது என்னவென்றால் “மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தான் லாபம் இருக்கும், ஒரு மாவட்டத்திற்குள் மட்டும் சென்றால் லாபம் இருக்காது அதனால் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது” என்று தெரிவித்துள்ளனர்.

9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

tn buses
tn buses

இது ஒரு பக்கம் இருக்க, நாளை அரசு பேருந்துகளை இயக்குவதற்கான அனைத்து பணிகளும் வெகு தீவிரமாக நடக்கிறது. பேருந்துகளில் உள்ள டயர்களை சரி பார்க்கும் பணி, இயந்திரங்களை சரி பார்க்கும் பணிகள் நடந்து வருகின்றது.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

தமிழகத்தில் மொத்தம் உள்ள 22 ஆயிரம் பேருந்துகள் நாளை செயல்பட உள்ளன. சென்னையில் மட்டும் 3300 பேருந்துகள் செயல்பட உள்ளன. 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சில வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அது,

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

  • 50 சதவீத பயணிகள் தான் பேருந்தில் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • 15 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் வருவதை தவிர்த்து கொள்ளுதல் நல்லது.
  • பயணிகள், ஓட்டுநர் மற்றும் பயணசீட்டு தருபவர் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
  • பயணிகள் கிருமி நாசினி பயன்படுத்திவிட்டு தான் பேருந்திற்குள் செல்ல வேண்டும்.

இது போன்ற வழிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -