Saturday, May 11, 2024

அனைத்து இடங்களிலும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் – அரசு அறிவுறுத்தல்!!

Must Read

7 ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளாக தமிழக அரசு உணவகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

பொது முடக்கம்:

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் நாளை முதல் பேருந்துகள், உணவகங்கள் மற்றும் திரைத்துறை படப்பிடிப்புகள் நடத்தி கொள்ளலாம் என்று நேற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை அடுத்து எது செயல்படுத்தப்படும் என்றும் மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டு இருக்கிறது.

என்ன என்ன நெறிமுறைகள்:

உணவகங்கள்:
  • வாடிக்கையாளர்கள் குறித்த எண்ணிக்கையில் தான் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • முகக்கவசம் மற்றும் சமூகஇடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
  • வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பின் தான் உணவகங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • நோய் அறிகுறி இருந்தால் உள்ள அனுமதிக்க கூடாது.
பட பிடிப்பு தளங்களுக்கு:

அதே போல் திரைத்துறை படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவித்து இருப்பது,

  • 75 பணியாளர்கள் தான் படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • பார்வைளார்களுக்கு அனுமதி வழங்க கூடாது.
  • படப்பிடிப்புகள் கொரோனா தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நடத்தப்பட கூடாது.
  • பொது இடங்களில் எச்சில் துப்ப கூடாது.
  • முகக்கவசம், சமூகஇடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
  • நோய் அறிகுறி இருந்தால் படப்பிடிப்பிற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
வழிபாட்டு தலங்களுக்கு:

  • வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட கூடாது.
  • கோவில்களில் விபூதி, குங்குமம், அர்ச்சனை பூக்கள் போன்றவை கைகளில் பெற கூடாது.
  • மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கோவில்களுக்குள் திரள்வதை தவிர்க்க வேண்டும்.
  • ஒரு இடத்தில அமர்வது, விழுந்து கும்பிடுவது போன்றவை தவிர்த்தல் நல்லது.
  • குறைந்த அளவு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
  • முகக்கவசம், சமூகஇடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
வணிக வளாகங்கள்:

  • மக்கள் குறைந்தது 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகளில் போதிய இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
  • எங்கும் கூட்டம் போட கூடாது.
  • கிருமி நாசினி பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்றவையும் பின்பற்றபட வேண்டும்.

இதுபோன்ற நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -