Sunday, April 28, 2024

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருக்கு கொரோனாவா?? – அதிர்ச்சி தகவல்!!

Must Read

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 51 பேர் கொண்ட குழுவில் வேகப்பந்து வீச்சாளர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை அணி:

கடந்த 21 ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் 51 பேர் கொண்ட குழு துபாய் நாட்டிற்கு சென்றது. ஐ.பி.எல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் பல அணிகளில் சென்னை அணி மட்டும் தான் 5 நாள் பயிற்சியில் ஈடுபட இருந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

cheenai team before arriving arab
cheenai team before arriving arab

இவர்கள் செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து விட்டுத்தான் சென்றனர். யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டதால் தான் அவர்கள் துபாய் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். சென்னை அணி வீரர்கள் இன்று பயிற்சி மேற்கொள்ள இருந்தனர். ஆனால், 51 பேர் கொண்ட குழுவில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்ட வீரர்கள்:

இதனால் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். போட்டிகள் குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா என்பது கேள்விக்குறி தான். 12 பேரும் துபாய் நாட்டிற்கு சென்ற பிறகு தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யார் யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு பயிற்சிகள் நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ipl 2020 csk arrival
ipl 2020 csk arrival

தீபக் சச்சார் என்ற வேகப்பந்து வீச்சாளர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அணியில் உள்ள அனைவரும் பி.சி.சி.ஐ வழிகாட்டுதல்களை பின்பற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -