பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

கடந்த 5 மாதங்களாக பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களில் இயல்பு வாழ்கை ஸ்தம்பித்துள்ளது. இப்பொது ஆகஸ்ட் 31 இல் முடிவடைய உள்ள பொது ஊரடங்கு தளர்வுகளை பற்றிய செய்தியை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தளர்வுகள்

செப்டம்பர் 1 இல் என்னென்ன தளர்வுகள் ஏற்படும் என அனைவரும் காத்திருக்கும் நேரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். பள்ளிகள் இப்பொழுது திறக்கப்படுமா?? என அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

Minister-Sengottaiyan-Press-Meet_
Minister-Sengottaiyan-Press-Meet

தற்போது இந்த கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் செப்டம்பர் 1 முதல் அனைத்து மாநிலங்களில் உள்ள பெரிய நூலகங்கள்,  மாவட்ட நூலகங்கள் திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

library
library

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “சிவில் சர்வீஸ் தேர்வுகள் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதனால் மாணவர்களுக்கு இலவச காணொளி காட்சி மூலம் பயிற்சி வழங்கப்படும். அந்த வகையில் தனியார் பயிற்சி மையங்களுடன் இணைந்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை இலவசமாக காணொலி காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here