Friday, April 26, 2024

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை வெற்றி – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!!

Must Read

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு மற்றும் பாரத் பயோடெக் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதித்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி:

இந்தியாவில் கொரோனா நோய் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனாவிற்கான தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிப்பதில் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

போதைப்பொருள் வழக்கில் சிக்கும் பிரபல தமிழ் நடிகை!!

covaxin
covaxin

அதன் முடிவாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து “கோவாக்சின்” என்ற தடுப்பு மருந்தை கடந்த சில நாட்களுக்கு முன் கண்டுபிடித்தனர். அந்த தடுப்பு மருந்தினை மனிதர்கள் மற்றும் விலங்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி வாங்கினர்.

ஒரு வகை குரங்கு:

இந்த பரிசோதனையை குரங்களுக்கு செலுத்தி பார்க்க தேசிய வைராலஜி நிறுவனம் முன் வந்தது. Rhesus Macaques என்ற குரங்கு இனத்திற்கு இந்த மருந்தினை செலுத்தினர். இந்த வகை குரங்குகளை தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் அவைகளுக்கு எளிதில் நோய் பரவாது என்பது தான். அவர்கள் 20 குரங்குகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு 4 பிரிவுகளாக்கினர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

rhesus macaques
rhesus macaques

ஒரு பிரிவிற்கு 5 குரங்குகள் என்ற வகையில் அவை தனித்தனியாக பரிசோதிக்கப்பட்டன. அதில் சில குரங்குகளுக்கு உண்மையான கோவாக்சின் மருந்தும் மற்றவைகளுக்கு போலியான மருந்தும் கொடுக்கப்பட்டன. 14 நாட்கள் இந்த சோதனைகள் நடத்தப்பட்டது.

அதில் குரங்குகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. விலங்குகளுக்கு செலுத்தி நல்ல முடிவுகள் வெளிவந்துள்ளதால் அடுத்ததாக மனிதர்களுக்கு செலுத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த செய்தி மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

RCB vs SRH 2024: 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு…, ஹைதராபாத் அதிர்ச்சி தோல்வி!!

IPL தொடரின் 17வது சீசன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -