பிக் பாஸில் பங்கேற்கும் பிரபல இளம் நடிகை – யாருனு தெரியுமா??

0
lakshmi menon
lakshmi menon

பிக்பாஸ் சீசன் 4 தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான 2 ப்ரோமோக்கள் வெளியாகின. மேலும் சமூக வலைதளங்களில் இதில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் பெயர்கள் வெளியான வண்ணம் இருந்தது. தற்போது இதில் இளம் நடிகையான லட்சுமி மேனன் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் 4:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த மூன்று சீசன்களும் ஏக வரவேற்பை பெற்றனர். பிக் பாஸில் போட்டியாளர்களை தேர்தெடுப்பதில் சில நுணுக்கங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது விஜய் டிவி பிரபலங்கள் , காமெடி நடிகர்கள் ஒருவர், மாடலிங் இளம் பெண்கள் என கலந்து தான் பிக் பாஸ் போட்டியாளர்கள் இருப்பர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

sandy and kamalhassan

அந்த வகையில் சீசன் 4 இல் தற்போது விஜய் டிவி பிரபலங்களுக்கு அதிக இடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா அய்யர் போன்ற பிரபலங்களின் பெயர்கள் வெளியாகின. ஆனால் அவர்களோ நாங்கள் பங்கேற்கவில்லை என பகிரங்கமாக எதிர்த்து பதிவிட்டனர். இந்த சீசன் ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டது. மற்ற சீசனை போல இல்லாமல் புது விதமாக ப்ரோமோக்கள் இருந்தது.

lakshmi menon
lakshmi menon

கொரோனா காரணமாக விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் பின்தங்கியே இருந்தது. தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 4 மூலம் முன்னணிக்கு வர வாய்ப்புள்ளது. இந்த சீசனில் கலந்துகொள்ளும் இளம் நடிகை ஒருவரின் பெயர் வெளியாகியுள்ளது. கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு போன்ற படங்களில் நடித்த  இளம் நடிகையான லட்சுமி மேனன் இந்த 4 வது சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

lakshmi menon in bigg boss
lakshmi menon in bigg boss

பட வாய்ப்புகள் ஏதும் கைவசம் இல்லாததால் தனது படிப்பின் மீது ஆர்வத்தை செலுத்தி வந்த லட்சுமி மேனன் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த லட்சுமி மேனன் பிக் பாஸில் கலந்துகொள்வதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here