சூர்யாவின் மகள் தியா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இத்தனை மதிப்பெண்கள் எடுத்துட்டாங்களா?? சந்தோசத்தில் மூழ்கிய குடும்பம்!!

0
சூர்யாவின் மகள் தியா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இத்தனை மதிப்பெண்கள் எடுத்துட்டாங்களா?? சந்தோசத்தில் மூழ்கிய குடும்பம்!!
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா – ஜோதிகா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தியா எழுதினார்.
இந்த நிலையில் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நடிகர் சூர்யாவின் மகள் தியாவின் மதிப்பெண், தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, அவர் தமிழில் 96, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 94, இயற்பியலில் 98, வேதியலில் 98 என ஆக மொத்தம் 600க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here