நீட் தேர்வு பயத்தால் அதிகரிக்கும் தற்கொலைகள் – ட்ரெண்ட் ஆகும் #BanNEET !!

0

நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தினால் அதிகளவிலான தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் படித்து, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மன உளைச்சலில் பல மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இந்நிலையில் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி சமூக வலைதளங்களில் #BanNEET ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

உயிர் பலி வாங்கும் நீட் தேர்வு:

கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பல எதிர்ப்புகளையும் மீறி நீட் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னர் வரை 12ம் வகுப்பில் பெரும் கட் ஆப் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே மருத்துவக் கல்லூரிகளில் சீட் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக இரவு, பகல் பாராமல் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் உச்சபட்ச மதிப்பெண்களை பெற்றும், மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத காரணத்தால் விரக்தியில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்பட்ட முதல் உயிர்பலி மாணவி அனிதா.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அனிதாவின் தற்கொலை தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், சிபிஎஸ்இ பாடங்களை அடிப்படையாக வைத்து கேள்விகள் கேட்கப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முயலவில்லை. பல கிராமப்புற வசதி குறைந்த மாணவர்களால் இதற்கென தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பதற்கும் பணமில்லாத காரணத்தால் அவர்களின் மருத்துவர் கனவு நிறைவேறாமல் போகிறது.

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை வெற்றி – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!!

suicide
suicide

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு பயத்தால் சுபஸ்ரீ, ஹரிஷ்மா, விக்னேஷ் மற்றும் இன்று ஜோதி என 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் நீட் தேர்வினை ரத்து கோரிக்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நாளை (செப் 13) நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வரும் நிலையில் 12 லட்சம் மாணவர்களின் உயிரை ஆபத்தில் நிறுத்துவது ஏற்புடையதல்ல, எனவே நீட் தேர்வை ரத்து செய்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் #BanNEET #SaveStudents ட்ரெண்ட் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here