இந்தியாவில் 5 கோடி வேலைவாய்ப்புகளை வழங்க அரசு திட்டம் – மத்திய அமைச்சர் பேட்டி!!

0
nitin-gadkari
nitin-gadkari

இந்தியாவில் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் வேலையின்மையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தவும், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை வலுப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேலைவாய்ப்பு தொடர்பான பல திட்டங்களை வெளியிட்டார். இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் நிதின் கட்காரி உரையாற்றினார். அதில், நிதி அயோக்கின் முதல் முயற்சியாக “Arise Atal New India” திட்டத்தை பாராட்டி பேசினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

MSME-
MSME-

வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை கூக்குவிப்பதையும், இதன் மூலம் ஆதாயம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் பேசிய அவர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு இலக்கு வைத்துள்ளது என கூறினார்.

உபரி அரிசி
உபரி அரிசி

உபரி அரிசியை, எத்தனால் உற்பத்தியில் பயன்படுத்தினால் லாபம் கிடைக்கும் என்றும் இதனால் சேமிப்பு கிடங்கில் வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும். மேலும் சுற்றுசூழலை மாசுபடுத்தாத எரிபொருளும் கிடைக்கும் என்று கூறினார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியை 49 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகவும், MSME ( சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை) பங்களிப்பு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்துவதே தனது குறிக்கோள்.

சிறு, குறு, நடுத்தர துறை
சிறு, குறு, நடுத்தர துறை

மேலும் சிறு, குறு, நடுத்தர துறை, தொழில் முனைவோர் அதிகளவு ஊக்கம் அளிக்கும் போது திறமையானவர்கள் முன்னேற வாய்ப்பு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here