நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு – மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன??

0

செப்டம்பர் 13ம் தேதி (நாளை) நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்வு நடைபெறுவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வெழுத செல்லும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

நீட் தேர்வு:

இந்தியாவில் நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

நீட் தேர்வு பயத்தால் அதிகரிக்கும் தற்கொலைகள் – ட்ரெண்ட் ஆகும் #BanNEET !!

நாடு முழுவதும் 155 நகரங்களில் 3,842 தேர்வு மையங்களில் 15,97,433 மாணவர்கள் நீட் தேர்வெழுத உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,17,990 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்விற்கு பல்வேறு எதிர்ப்புகள் உள்ளதால் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நாளை பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை தேர்வு நடைபெறும். ஆனால் உடல் வெப்பநிலை, ஆவண சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் உள்ள காரணங்களால் மாணவர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

  • தேர்வெழுத வரும் மாணவர்கள் தங்களது மொபைல்களில் ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
  • 50 மி.லி அளவுள்ள கிருமி நாசினி, முகக்கவசம், வெளிப்படைத்தன்மை உள்ள குடிநீர் பாட்டில் மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.
  • ஹால் டிக்கெட் மற்றும் உடல்நல மருத்துவ சான்றிதழ் இல்லாத மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள நேரத்தின் படியே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை (ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, etc) எடுத்து வர வேண்டும். ஆள்மாறாட்ட குற்றங்களை தடுப்பதற்காக இது அவசியம்.
  • நீட் விண்ணப்ப படிவத்தில் அளித்துள்ள பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றினை எடுத்து வர வேண்டும்.
  • 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் தேர்வெழுதவும் மற்றும் தேர்வு முடிந்து வெளியே செல்லும் போதும் பின்பற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here