Sunday, May 5, 2024

மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை..!

Must Read

சென்னையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலையறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விட பட்டுள்ளது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, வேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருவள்ளூர் மாவட்டங்களின் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில நகரங்களில் லேசாக மலை பெய்ய கூடும். அதனை தொடர்ந்து அதிக பட்சம் வெப்பநிலையாக 34 டிகிரியும் குறைந்தபட்சம் 27 டிகிரியும் நிகழும் என கூறப்படுகிறது.

செப்டம்பர் 6 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

chennai-weather
chennai-weather

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவலாவில் 4 செ,மீ மழை பேய்ந்துள்ளது. மேலும், பந்தலூர், அவலாஞ்சி பகுதிகளில் 1 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 19 இல் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

ஆகஸ்ட் 17 மற்றும் 18 இல் வடக்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகளில் 45-50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய அரபிக்கடல் போன்ற பகுதியில் 50-60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 19 இல் வடக்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகளில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச கூடும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

beach
beach

மேலும் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை கர்நாடகா முதல் குஜராத் கடலோர பகுதி போன்றவற்றில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 19 முதல் 21 வரை 50-60 கி மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த கற்று வீச கூடும். இதனால் மீனவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி 11.30 வரை கடல் அலைகள் தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடியில் 2.5 மீ முதல் 3.1 மீ வரை எலும்புக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -