செப்டம்பர் 6 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
Lock
Lock

பீகாரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 6 வரை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

பீகார் மாநில அரசின் உத்தரவின்படி, செப்டம்பர் 6ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். ரயில் மற்றும் விமான சேவைகள் செயல்படும். அனைத்து கல்வி நிறுவனங்களும், வழிபாட்டுத் தலங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Lock down
Lock down

அரசு வெளியிட்ட அறிக்கையில், ”பீகார் மாநிலத்தில் COVID-19 இன் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, MHA (உள்துறை அமைச்சகம்) உத்தரவின் தொடர்ச்சியாக, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 06.09.2020 வரை நடைமுறையில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டு இருந்த உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 1,03,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபாயம் – சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 30 வரை அமலில் உள்ள நிலையில் பீகார் அரசாங்கம் செப்டம்பர் 6 வரை ஊரடங்கை நீட்டித்து உள்ளது. பீகார் முதல் மாநிலமாக ஊரடங்கை நீட்டித்து உள்ளது. இதனால் ஆகஸ்ட் 30க்கு பிறகும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here