ரேவண்ணா ஜாமீன் மனு விவகாரம்., கடத்தப்பட்ட பெண் வீடியோ வெளியீடு? தொடரும் பரபரப்பு!!!

0
ரேவண்ணா ஜாமீன் மனு விவகாரம்., கடத்தப்பட்ட பெண் வீடியோ வெளியீடு? தொடரும் பரபரப்பு!!!

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணிபுரிந்து வந்த பெண்ணை, அவர் பாலியல் வன்கொடுமை செய்து கடத்தி வைத்துள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி ரேவண்ணா வீட்டில் சோதனை நடத்தி, அப்பெண்ணை சிறப்பு புலனாய்வு குழு மீட்டதோடு, அவரையும் கைது செய்தனர்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., தேர்வில் வெற்றி பெற, இப்போதே இது தேவை? தவறவிடாதீர்கள்!!!

இதையடுத்து எச்.டி.ரேவண்ணா மீதான ஜாமீன் மனு, இன்று (மே 13) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், கடத்தப்பட்டதாக கூறும் பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “என்னை யாரும் கடத்தவில்லை. நான் என் விருப்பத்தின் பேரில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறேன்.” என கூறி உள்ளார். இதனால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு நிகழ்கிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here