சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிக்கறதா பாஜக?? மாநில துணைத்தலைவர் விளக்கம்!!

0

தற்போது தண்டனைக்கு பின்பு சசிகலா தமிழகம் திரும்பிய நிலையில் இவரை அதிமுக கட்சி உடன் பாஜக இணைக்க முயற்சி செய்கிறதா?? என்பதை பாஜக மாநில துணை தலைவர் விளக்கியுள்ளார்.

அதிமுக:

கடந்த 2017ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முடித்துவிட்டு இந்த மாதம் தமிழகம் வந்தார். அவர் தமிழகம் வந்ததும் அரசியல் சூழ்நிலைகள் சூடுபிடித்தது. மேலும் அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து சசிகலாவின் வருகைக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் தினகரன் மற்றும் சசிகலா சேர்ந்து அதிமுகவை கைப்பற்ற திட்டம் தீட்டி வருகின்றனர். மேலும் இந்த தேர்தலில் அதிமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் பாஜக கட்சி சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க முயற்சி செய்கிறது என்று பலர் கூறி வந்தனர். தற்போது இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அவர் பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்த பின்பு இந்த பேட்டியை அளித்துள்ளார்.

‘வெற்றிநடை போடும் தமிழகமே’ விளம்பரம் நிறுத்தம் – தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம்!!

அவர் கூறியதாவது, தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி பாஜக தேர்தல் களத்தில் போட்டி இடுகிறது. மேலும் இதுவரை தேர்தலுக்காக சசிகலாவிடம் கூட்டணி குறித்து தனியாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று விளக்கியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here