விவசாயிகள் போராட்டம் எதிரொலி – மத்திய அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவில் இந்தியர்கள் கார் பேரணி!!

0

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை எதிர்க்கும் வகையில், மத்திய அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் காரில் பேரணி நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் கார் பேரணி

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம் உலக மக்களிடையே சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், இந்திய குடியரசு தினத்தன்று விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் கலவரம் உண்டானது. இந்த சம்பவம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

”ராஜா ராணி’ சீரியல் நடிகரை அடித்த சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!!

இந்நிலையில் பல்வேறு உலக பிரபலங்களும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். ரிஹானா மற்றும் கிரேட்டாவின் பதிவுகளுக்கு இந்திய பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேளாண் சட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக, அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கார் பேரணி நடத்தியுள்ளனர். நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறையை ஒட்டி சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள கடற்கரையில் இந்த கார் பேரணி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here