கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பீதியடையும் மக்கள்!!

0

தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா இன்னும் முழுமையாக நம்மை விட்டு போகவில்லை. இந்நிலையில் தற்போது மஹாராஷ்டிராவில் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பல அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் என அனைவரையும் பாதித்துள்ளது. தற்போது இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு ஜெயந்த், ராஜேஷ், அணில், ராஜேந்திர ஷின்கானே மற்றும் பசுக்காடு ஆகிய அமைச்சர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது உணவு, சிவில் சப்லைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் சாகன் புச்பாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே என்னுடன் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளவும். யாரும் கவலைப்பட தேவை இல்லை. என் உடல் நலனாக உள்ளது.

#TNvsAP விஜய் ஹசாரே தொடர் – அஸ்வின் அசத்தல் சதம்! ஆந்திரா அதிரடி வெற்றி!!

கொரோனா வைரஸை விரட்ட குடிமக்கள் அனைவரும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 19,94,947 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் தற்போது 15,149 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 1,788 பேர் உயிர் இழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here