‘பிரியமானவளே’ பாடலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருடன் ஆடிய டிடி – வைரலாகும் வீடியோ!!

0

பிரபல தொகுப்பாளினி டிடி, பாண்டியன் ஸ்டோர் குமரனுடன் டிவி ஷோ ஒன்றில் இணைந்து ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் விஜய் பட பாடலுக்கு அவர்கள் இருவரும் நடனம் ஆடியிருப்பது விஜய் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் பட பாடல்:

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாகிய திவ்யதர்ஷினி என்ற டிடி, அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸின் குமரனுடன் இணைந்து விஜயின் பிரியமானவளே பட பாடலுக்கு நடனமாடியுள்ளனர். விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் இணைந்து ஆடிய இந்த நடனம் தற்போது வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிகாரிகள் அலட்சியம் – ‘பிப்ரவரி 30’ என வாரிசு சான்றிதல் வழங்கிய வட்டாட்சியர்!!

டிடி தனது ட்விட்டரில் இது பற்றி “ப்ரியமானவளே படத்தை 100 தடவையாவது பார்த்துருப்பேன். அதுவும் விஜய் மற்றும் சிம்ரனுக்காக பார்த்தேன். டிவி ஷோவில் அந்த பாட்டை டக்குனு போட்டதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுடன் டக்குனு டான்ஸ் ஆடிட்டேன்” என்று மகிழ்ச்சியுடடன் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து ஆடிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here