‘வெற்றிநடை போடும் தமிழகமே’ விளம்பரம் நிறுத்தம் – தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம்!!

0

தமிழக அரசின் சாதனையை வெளிக்காட்டும் விதமாக ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பான விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு விட்டது என மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.

விளம்பரங்கள் நிறுத்தம்

தமிழக அரசின் சாதனையை பறைசாற்றும் வகையில் தொலைக்காட்சிகள் மற்றும் ரேடியோவில் ‘வெற்றிநடை போடும் தமிழகமே’ என்ற விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்களை மக்கள் நினைவுகூரும் விதமாக அமைந்திருந்தது அந்த விளம்பரங்கள். அரசு பணத்தில் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பிலும், சமுகநலவாதியான ட்ராபிக் ராமசாமி சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#NZvsAUS டி 20 போட்டி – நியூஸிலாந்து அசத்தல் வெற்றி!!

முன்னதாக இந்த வழக்கு குறித்து விளக்கம் கொடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்ற விசாரணையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 18ம் தேதி முதல் தமிழக அரசின் சாதனை விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதாக தமிழக அரசு சார்பில் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here